Tuesday, December 27, 2016

தங்கல் (Dangal) (No Spoilers)


நல்ல படமும் எடுக்க வேண்டும் அது A,B & C என மூன்று மையத்தினர்களையும் கவர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாய் அது கா. முதல் க. வரை எல்லா மாநிலங்களிலும் வெளியிட்டு வெற்றி பெற வைக்க வேண்டும். எவ்வளவு பெரிய சிரத்தை !?!. செவ்வனே செய்து முடித்திருக்கிறார் திரு.அமீர்கான் அவர்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு, செப்பனிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். சமுத்திரக்கனி அவரின் 'அப்பா' வெளிவந்ததையொட்டி ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருந்தார். "அப்பா படத்தை திரைக்கதையாய், வசனங்களாய் நான் எழுதும் போதே.. எனக்குத் தெரியும்... இந்தந்த இடத்துல கைதட்டல் வரும்...இந்தந்த இடத்துல மக்கள் உணர்ச்சிவசப்படுவாங்கன்னு... "

அதே மாதிரியும் நடந்ததாய் அவர் சிலாகித்துக் கொண்டார். கள நிலவரம் தெரியாது. அது சமுத்திரக்கனி படத்திற்கு நடந்ததோ இல்லையோ..! அமீர் கான் படத்திற்கு நடந்திருக்கிறது.

மட்டுமல்லாமல், அவர் தேர்ந்து எடுத்திருக்கும் களம் தற்போதைய காலகட்டத்தில் அனைவராலும் பேசப்படும் Empower of Women!

அடுத்தது Casting. கதாப்பாத்திர தேர்வு!

இவ்வாறு, வெற்றிக்கான அனைத்து கம்பசூத்திரங்களையும் அறிந்த ஆமிர், ஒரு மல்யுத்த வீரனாய் இறங்கி ஆடியன்ஸகளின் இரு கால்களையும் தூக்கிப் பிடித்து மேலேற்றி பின்புறமாய் சாய்த்து ஐந்து மார்க்குகள் எடுத்திருக்கிறார்.

குறைகளையும் சொல்லியாக வேண்டும் இல்லையா? ஒன்று இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு ஓடும் படம்! இரண்டு எல்லாமே முன்பே கணிக்கக் கூடிய காட்சியமைப்புகள்!

மேலும், வழவழவென்று இழுக்காமல் முடித்து விடுகின்றேன். 'படம்னா.. இப்படித்தாண்டா எடுக்கணும் என்பதை விட.. ஒரு படம் ஹிட் ஆகணும்னா.. இப்படித்தாண்டா எடுக்கணும்..." என்று சொல்லி ஹிட்டடித்திருக்கிறார் அமீர் ! ரஜினியின் ஃபார்முலாவும் அது தானே !!


0 comments:

Post a Comment