Monday, February 12, 2018

ஏமாலி

ஏமாலி

Related image


ரொம்பவுமே வித்தியாசமான தலைப்பை யோசித்திருக்கிறார்களாம்.
'முகவரி' நல்ல படம் தான். 'காதல் சடுகுடு' நல்லா தாங்க இருந்துச்சி படம். 'தொட்டி ஜெயா' நல்லா இருந்துச்சா இல்லையானு ஞாபகத்தில இல்லாத படம். 'நேபாளி' பரபரப்பை உண்டு பண்ணி 'ரொம்பவுமே சுமார் மூஞ்சி' படம். '6' வும் அதே போல தான். ஆனால் 'சுமார் மூஞ்சி' ரகம்.
ஆக V. Z. துரை இதுவரை எடுத்த ஆகச் சிறந்த மொக்கை படம் இதுவே என அறுதியிட்டு கூறலாம். தற்கால ட்ரென்டை பிடித்திருக்கிறோம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஒன்றரை லைனை சொன்னால் 
'பார்க்கலாம் போலயே..' என நீங்கள் தயாராகலாம். வேண்டாம். என்னைப் போல ஏமாளியாகி விடாமல் காப்பாற்றுவது எனது கடமை.

இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை. ஆனால் வசனம் ஆசான் என்று போடுகிறார்கள். சமுத்திரக்கனியை காமெரா முன்னால் நிப்பாட்டினாலே போதும், அவரே பேச ஆரம்பித்து விடுவார். (சமுத்திரக்கனி இருக்கிறார் எனத் தெரிந்தும் படத்தை பார்த்த என் மன தைரியத்தை பாராட்டலாமே ஃப்ரென்ட்ஸ்)
படத்தின் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஜாஸ்தி தான். 2X ல் பார்த்தால் கூட புரிகிறது. அந்த வகையில் இது ஒரு சாதனை படம்.
ஏமாலி - ஒ@கா$%லி

0 comments:

Post a Comment