Saturday, December 24, 2016

Don't Insert Finger into Lover




Don't Adjust Lover By Hand.
Don't Insert Finger into Lover.

இப்படி எதையோ பார்த்து படித்து கொண்டிருந்தான் எம்மவன்.  பயபுள்ளைக வாட்ஸ் அப்பல என்னத்தையோ அனுப்பிச்சுட்டாங்களோன்னு ஒரு வினாடி நில நடுக்கம்.

மவன் மொபைலை நோண்டுவான். அந்த மாதிரி இந்த மாதிரி அஜால் குஜால்லாம் அனுப்பாதீங்கன்னு சொல்லி வச்சிருக்கேன். அதையும் மீறி அனுப்பிச்சே ஆவேன்னா ஆன் லைன்ல இருந்தா மட்டும், சிக்னல் கொடுத்து acknowledge வந்தா மட்டும் அனுப்புங்கோ... இல்லாட்டி  "NO ! .... "  என்று 'கும்பிடு' எமொடிகான் போட்டு கெஞ்சியிருக்கிறேன்.

திரும்பி பார்த்த போது பையன் ஜன்னலில் தொங்கியபடி A /c மெசின்ல ஒட்டியிருக்குற caution ஸ்டிக்கர அண்ணாந்து பார்த்து படிச்சுட்டு இருக்கான். 'டேய்.. இறங்குடா கீழ...அது லவ்வர் இல்லடா' ன்னேன். பின்ன என்னவாம்ங்கற மாதிரி கீழே குதித்து அருகில் வந்தான்.

How to Pronounce Louver  - கூகுள்ல போட்டு கத்துக் கொடுத்தேன். இல்லை கத்துக்கிட்டான்.


0 comments:

Post a Comment