Sunday, December 25, 2016

பைரவா பாடல்கள்


சந்தோஷ் நாராயணன்; அவரின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி இசையமைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கான பரிஷார்த்த முயற்சி தான் பைரவா பாடல்கள்.
'பாப்பா' பாட்டும் 'பட்டைய கிளப்பு' பாட்டும் குத்தாட்ட இன்ட்ரோ பாடல்கள் மாதிரியான ஒரே ரகம்.
விஜய் படத்திற்கு தகுந்தமாதிரி இசையமைக்கனும் என்பதற்காக விஜயின் 'மச்சா பேரு மதுர..' பாட்டையே நியாகப்படுத்துற மாதிரி இருக்கிறது, மேற்கண்ட ரெண்டு பாடல்களில் ஒரு பாடல். அது எந்த பாடல் யோசித்தால்... ரெண்டு பாட்டுலேயுமோ என்கின்ற சந்தேகம் துளிர் விடுகிறது.
திருப்பாச்சி அருவாளா பாட்டுல... 'அட களவாணி கோத்திரமே காளமாட்டு...' கோரஸ் குரலாய் பெண்கள் பாடுவார்களே... அதே பாணியில் பெண்கள் கோரஸ் வருகிறது பாப்பா பாடலில்.
'வர்லா வர்லா வா பைரவா....' பாட்டு தெர்ர்ர்ர்ர்இய்!
'அழகிய சூடான' பாட்டு ஏதோ பழைய ரஹ்மான் தெலுங்கு டப்பிங் படத்தின் பாடலை தமிழ் பதிப்பில் கேட்பது போலிருக்கிறது. 'நாட்டினில் வன்முறை வேண்டாம்...கட்டிலில் வன்முறை வேண்டும்' என்ற வரிகளை கேட்கும் போது, இன்னுமாடா.. இதை எழுதி கொண்டிருக்கீங்க என்று பார்த்தால்... அதை எழுதினவர், அந்த வரிகளுக்கு காப்பி ரைட் வாங்கி வைத்திருக்கும் வைரமுத்து.
'நில்லாயோ' பாடல் ஏதோ ஒரு மிஸ்கின் படத்தின் ஏதோ ஒரு பாட்டு. "கே" அடிக்கடி உபயோகிக்கும் வயலின்.
Verdict : நல்ல ஒரு உயர்தரமான ஹெட் செட்டில் ஒரு இருநூறு முந்நூறு முறை பாடல்களை கேட்டீர்களேயானால் கண்டிப்பாய் பிடிக்கும்.

0 comments:

Post a Comment