Friday, January 13, 2017

பைரவா (நோ ஸ்பாய்லர்ஸ் :-D )



விஜயை பற்றி படத்தின் கேமராமேன் ஒரு பேட்டியில் சிலாகித்திருந்தார். அவரை சுற்றி நான்கு கேமராவை வைத்தாலும், அந்த நான்கு காமெராக்குமே ஐஸ்டிஃபை செய்கிற மாதிரி அவுட்புட் கொடுத்து விடுவாராம். அது தான் விஜய்! நவரசங்கள் சொட்ட நடிக்கும் நடிகரா விஜய்? என்றால்... கிடையாது. ஆனால் அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கும் அம்சம் அவரிடத்தில் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

விஜயின் இளம், பேரிளம் ரசிகர்களை விட இளம் பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றும் பலதரப்பட்ட குடும்பங்கள் இன்று நான் கண்டுகளித்த திரையரங்கில் நிறைந்திருந்ததே அதன் சாட்சி. இதை எந்த கொம்பனாலும் (நன்றி:ஸ்டாலின்) மறுக்க முடியாது.

வெளியே மேன்ஷன் என்று காட்டப்பட்டு விஜய் மற்றும் அவர் நண்பர் சதிஷ் தங்கியிருக்கும் அறை, மற்றும் அவர் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி என்று எல்லாமே பகட்டான இடமாய் காட்டப்படுகிறது. கலர்ஃபுல் காட்சிகளாய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

ராம்ராஜ் ப்ரிண்டட் சட்டையுடன் மாஸ் ஸீன் லீட் கொடுக்கப்பட்டு சண்டை ஆரம்பமாகிறது. சண்டை முடிந்தவுடன் பாடல். வந்ததா ? இல்லையா ? வந்திருக்கும். பின்பு நாயகி அறிமுகம். பின்பு அவரை பின் தொடரும் படலம்.

இரண்டு இஞ்ச் அளவிற்கே இருக்கும் கீர்த்தி சுரேஷின் வாய் எப்படி.. வாயை திறந்தால் ஆறு இஞ்ச்-ற்கு விரிகிறதோ... அப்படி ஒரு ஃபிளாஸ்பேக்.. அவரின் வாய் வழி மூலமாக... அங்கே வரும் அதே வாயளவு
கொட்டாவியை அடக்கி விட்டு படத்தை தொடர எத்தனித்தால்.. இடைவேளை !

ரொம்பவுமே பேஸ்தடித்து தான் உட்கார்ந்து இருந்தேன். வேட்டைக்காரனில் ஆரம்பித்து பயணம் சுறா...பகவதி என்று பின்னால் போனது. நல்லவேளை பிற்பகுதியில் அப்படி சுமோக்கள் பறக்க, புஜ படைகள் சூழ படிக்கட்டுகள் ஏறி இறங்கி காட்சிகள் ஏதுமில்லை.

அதற்காக சந்தோஷப் பட வைத்தார்களா..? பழைய படங்களின் தோல்விகளின் இருந்து நாங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளோம் என்று சீரியஸ் வில்லனை காமெடி வில்லனாக சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Nitrous oxide எனும் சிரிப்பு வாயுவை பழங்கால திரைப்படங்களிலேயே பார்த்தாகி விட்டதே... என்னோமோ இப்போது தான் இந்த உலகிற்கு இவர்கள் அறிமுகப்படுத்துகிற மாதிரியான காட்சியமைப்புகள். அதனை நம்மீது முகர செய்தால் கூட சிரிப்பு வராத வறட்சி திரைக்கதை. இப்படியாக கிஞ்சித்தும் அழுத்தமில்லாத; சுவாரஸ்யமில்லாத காட்சிகளால் படம் தொடருகிறது. முடிவடைகிறது.

மருத்துவ கல்லூரி, மாணவர்களுக்கான தேர்வு முறை, கல்லூரியை நடத்தும் தாதா - என்று ஷங்கர், முருகதாஸ் டச் செய்ய வேண்டிய விஷயத்தை இயக்குனர் பரதன் தொட முயற்சித்து பெரும் தோல்வியை கண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment