Wednesday, January 25, 2017

கிடாரி ! - ஒரு பார்வை


சாத்தூர் ஊரின் பெரிய கையான கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) குத்துப்பட்டு, சாக கிடக்கும் நிலையில், கொம்பையாவின் கணக்கு வழக்குகளை பார்க்கும் பெரியவரின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது படம். அவர் கொம்பையாவிற்கு மச்சானும், அவர் மகனிற்கு பெண் கொடுத்த சம்பந்தியும் கூட.

கொம்பையாவின் இந்த நிலையிற்கு யார் காரணமாய் இருக்கக் கூடும் என்று பெரியவர் விவரிக்க ஆரம்பிக்கிறார்.

கொம்பையா பாண்டியன் பகை வளர்த்த எதிரிகளின் பெயிண்ட் ஆர்ட் புகைப்படங்களுடன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பிப்பது திரைக்கதை பாணியில் சுவாரசியத்தை கூட்டுகிறது.

கொம்பையா தம் மகனிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வளர்ப்பு பிள்ளை மற்றும் விசுவாச வேட்டை நாயாய் இருக்கும் அடியாள் கிடாரி சசிகுமார் மீது அதிக அக்கறை காட்டுவது காண்பிக்கப்படுகிறது.

ஆனால் எந்த விஷயம், சுவாரசியத்தை கூட்டியதோ அதே விஷயம் பெரும் அலுப்பை தட்டி விடும் இடம், இறுதியில் கிடாரிக்கான ஃபிளாஸ்பேக்கும் அதே தொனியில் விரிவது. இயக்குநனரே எதிர்பார்த்திருக்க மாட்டார் இது திரைக்கதையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதை.

அதில் இன்னொரு காரணமும் உண்டு. வலிய திணிக்கப்பட்ட கதாநாயகி மற்றும் காதல் காட்சிகள். ஒரு திரைப்படத்திற்கு அத்தியாவசமான எலிமென்ட் என்று அதை பெரியவரின் கதை சொல்லாடலிலிற்கு இடையே புகுத்தி இருப்பது மன்னிக்க முடியாத ஒன்று.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் கதாபாத்திரங்களின் தேர்வும், திரைக்கதை அமைப்பின் காட்சிகளும் மண் மணத்துடன் நகர்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களால், இது வழக்கமான சசிகுமாரின் வெட்டு குத்து படம் தான் என்ற முத்திரையுடன் முடிவடைகிறது.


0 comments:

Post a Comment