Thursday, February 19, 2015

Please consider the environment before printing this.


இதை அச்சிடும் முன் சுற்றுச் சுழலை கருத்தில் கொள்ளவும்.
(Please consider the environment before printing this.)
+++++++++++++++++++++++++++++++++++++++++
மரங்களை காப்போம். தேவையான போது மட்டும் அச்சிட்டு கொள்ளவும். (Save Trees. Please Print only when necessary.)

இப்படியான வாசகங்களை தினந்தோறும் உங்களுக்கு வரும் மெயில்களின் சிக்னேசர் ஃ புட்டரில் அல்லது உங்களின் இன்டர்நெட் பேங்க் பரிவர்த்தனைகளில் பார்க்க நேரிடலாம். ரொம்ப காலமாகவே எல்லா வங்கிகளும், பிசிகல் காபியை unsubscribe செய்து,  ஈமெயில் காப்பியிற்கு subscribe செய்து கொள்ளுங்கள் என்று மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி வருகின்றன. 

சும்மாவே எனக்கு சமூக விழிப்புணர்வு ஜாஸ்தி (அப்டின்னு நினச்சுட்டுருக்கேன்). அதுவும் முக நூலுக்கு வந்த பிறகு அந்த உணர்வு  ஊற்றெடுத்து பெருகி பொங்கி பிரவாகமாக நாலாபுறமும் பாய்வதாக (அதுவும்) நினச்சுட்டுருக்கேன்.

ஆக, நான் வைத்திருக்கும் எல்லா வங்கி கணக்கிற்கும் (சுவிஸ், தவிர) இந்த மாதிரிக்கு அந்த மாதிரியாய் மாற்றியாயிற்று. கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட் உட்பட. ஒன்லி ஈமெயில் ஸ்டேட்மென்ட், நோ ஹார்ட் காப்பி.

நிற்க. இப்போது ஏதோ தேவை ஒன்றிற்கு Address Proof தேவைப்பட்டது. என்னிடம் அது லேது. பட் 'கிரெடிட் கார்ட்' வைத்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர், 'ஏதாவது உங்களுக்கு வந்த சமீபத்திய ஸ்டேட்மென்ட் (ஒரிஜினல்) கொடுங்கள் போதும்.. கண்ணை மூடி வாங்கி கொள்வோம்'. என்றார்  (ஏன்னா... கார்டு கம்பனி,  கடன் கொடுத்து திரும்ப வாங்குறவன்ல ....)

அடுத்த தேர்வாய், உடனடியாய் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிற்கு ஓடினேன். கடைசி மூன்று மாத ஸ்டேட்மென்ட், ஹார்ட் காப்பி பிரிண்ட் அவுட்ற்கு எழுதி கொடுத்தேன். "அதற்கு Rs.100 + Service Tax ஆகும். நீங்க காசு கைல கொடுக்க வேண்டாம். நாங்களே உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வோம்" என்றவாறே எடுத்துக் கொடுத்தார் வங்கி பிரதிநிதி. அது முப்பது பக்கத்திற்கு ஒன்றும் ஓடி விடவில்லை. வெறும் மூன்றே பக்கம் என்பது தான் 'என்ன கொடுமை சார் இது'.

"இந்த சமூகத்திற்கு நான் செய்ததற்கு பிரதிபலனாய், சண்முகம் எனக்கு என்ன செய்தான் ?"  என்ற பலத்த சிந்தனையுடன் வீடு  திரும்பினேன்.

0 comments:

Post a Comment