Thursday, February 19, 2015

பை பை ஏர்டெல், வெல்கம் ACT ஃபைபர் நெட்




இந்த அரசு அலுவலர்கள் டைப் ரைட்டர் மெஷினில் ஒற்றை விரலை வைத்து டைப்பி கொண்டிருப்பார்களே, அது போலத் தான் நானும்,  பத்து நாளாய் மொபைல் டேட்டாவில் ஒற்றை விரலில் தடவி தழுவி முக நூலில் உலாவினேன். ஒன்றிரண்டு பதிவும் போட்டேன்.  காரணம் வசிப்பிட மாற்றம். முந்தைய ஏர்டெல் ப்ராட் பேண்ட் 4 Mbps ஸ்பீட்- 15 GB FUP பிளானை தற்சமயம் உங்கள் புது இடத்திருக்கு technical feasibility இல்லாததினால் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் 8 Mbps எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். காசு அதிகமாகுமே என்றதற்கு, அப்போ 2 Mbps எடுத்துக்கோ.. என்று திமிர் காட்டினார்கள். சரி, உன்னை ஏற கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று, பெங்களூரில் ஹிட்டடிட்டத்து  தற்சமயம்  சென்னையிலும் கலக்கி வரும் ACT  ஃபைபர் நெட்டுக்கு தொடர்பு கொண்டேன். தெய்வாதீனமாய் என்னுடைய ஏரியாவில் அவர்களின் சர்வீஸ் அவைலபிளிட்டி இருந்தது. இதற்கு முன்னர் ஏர்டெல்லுக்கு ஆயிரத்து நானுற்றி சொச்சம் கட்டிக் கொண்டிருந்தேன், அதை விட அதிகமான ஸ்பீட், அதிகமான GB ற்கு.  Rs.999/- + S Tax. (20 Mbps ஸ்பீட்- 40 GB FUP) - செம ப்ளான்ல...! 

ரெண்டே நாளில் வேலையை முடித்து விட்டார்கள். இது கேபிள் கனக்சன் போலத் தான். வீட்டு வெளியே ஒரு பாக்ஸ் அடித்தார்கள். (அதிலிருந்து எட்டு கனக்சன் எடுக்க முடியுமாம்).  பாக்ஸ் உள்ளே பெரிய சைஸ் மோடம் மாதிரி + பட்டெரி இருந்தது. அதற்குத் தேவையான பவரை நம் மீட்டரிலிருந்து எடுப்பதால், பில்லில் மாதத்திற்கு 50 ருபாய் டிஸ்கவுண்ட். :-) இந்த பாக்சில் இருந்து ஃபைபர் கேபிள் வான் வழியில் பயணித்து அருகாமையில் இருக்கும் இதை விட பெரிய சைஸ் சர்வர் பாக்ஸ்ற்கு செல்கிறது. அந்த சர்வர் பாக்ஸ் உங்கள் வீட்டில் வைக்க நீங்கள் அனுமதி கொடுத்தால், உங்களுக்கு கனக்சனே  ஃப்ரீயாம்.  இப்போதைக்கு சென்னையில் சில ஏரியாக்களையும் தான் கவர் செய்திருக்கிறார்கள். இதை பற்றி 'it rocks' என்று  ஒபினியன் கொடுத்த பிரபு காளிதாசிற்கும் நன்றி.

ஃபைபர் ஆப்டிகல் கேபிளை சொருகி இணையத் தொடர்பு கிடைத்த பின்பு தான் இதயம் சீராய் இயங்கத் தொடங்கியிருக்கிறது...

0 comments:

Post a Comment