Tuesday, June 13, 2017

ஒரு கிடாயின் கருணை மனு !


கிராமத்து கதைக்களம் என்பதால் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயமாய் செம ட்ரீட்.
ரொம்பவுமே யதார்த்தமாய் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திரைக்கதையும் விறுவிறுப்பாக கையாளப்பட்டிருக்கிறது. நிறைய நடிகர்கள். அத்துனை பேரும் ஆர்ப்பாட்டமாய் நடித்திருக்கிறார்கள்.
ஹீரோயின் ப்ரவீனா. இன்றைய டாப் ஹீரோயின்ஸ் அனைவருக்கும் டப்பிங் கொடுத்து வருபவர். இவரைப் பற்றி ஏற்கனவே அம்மணியின் போட்டோ போட்டு சிலாகித்திருக்கிறேன். குளோஸ் அப்-ல் பார்க்கும் போது மட்டும் அம்மணி ஹீரோயின் மெட்டீரியாலாய் இல்லையே என்று வருத்தப்பட வைக்கிறார்.
வக்கீலாய் வரும் ஜார்ஜ் கதாப்பாத்திரம் தான் உச்சம். என்ன தான் சொந்தக்காரனாய் இருந்தாலும், தொழில் என்று வரும் போது அவர்கள் எப்படி காசு பண்ண பார்ப்பார்கள் என்பதை ரொம்ப அழகாய் எடுத்து காண்பித்திருக்கிறார், இயக்குனர்.
நம் மண்ணின் கலாச்சரத்தை களமாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் இதை உலக சினிமாவோடு ஒப்பிடுகிறார்கள். சந்தோஷம்.
ஒரு கிடாயின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த படம் என் வீட்டு சஹா வின் பார்வையில் :

படம் புடிச்சிருக்கா.. ? - இது நான்.
"பரவால்ல.. ஏதோ ஊரு ஃபங்க்ஷனு கிளம்புறாங்கா.. ஆக்ஸிடென்ட் நடக்குது... சுத்தி சுத்தி அதையே தான் காமிச்சிட்டு இருக்காங்க.. "
"ஏன்.. நல்லா தானே போச்சு. காமெடியால்ல பேசிட்டு இருந்தாங்கா.. "
"இருந்தாங்க... இந்த மாதிரி படத்தையெல்லா இவ்ளோ செலவு பண்ணி.. இவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல பாக்கணும்னு என்ன அவசியம்..? பெரிய பெரிய செட் போட்டு எடுக்குற படங்க.. (பாகுபலியை குறிப்பிடுகிறார்) நிறைய ஃபாரின் லோகேஷன்ஸ் காம்பிச்சு.. நல்ல நல்ல சாங்ஸ் வர்ற படங்க... (ஷங்கர் படங்களை குறிப்பிடுகிறார்) இதையெல்லா தேட்டர்ல வந்த பாத்தா எஸ்சைட்மென்டா இருக்கும். இது என்னடானா.. முக்காவாசி படத்தை ஒரே இடத்துல குத்த வச்சு எடுத்துருக்காங்க.. இதுக்கு 450 ரூவா டிக்கெட் 550 ரூவாயிக்கு ஸ்நாக்ஸ் 90 ரூவா பார்க்கிங்குக்கு..
அமைதியாய் இருந்து தந்திரமாய் தப்பித்து கொள்ளவும் என்று நம் முன்னோர்கள் சொன்னது ஒன்றும் முட்டாள்தனமில்லை. அதையே கடைப்பிடித்தேன்.
பார்கிங்கிலிருந்து வண்டியை கிளப்பி ஸ்லோப்பில் ஏற்றி கொண்டிருக்கும் போது சொன்னார்கள்... 'இதுக்கு பேசாம 'தொண்டன்' படத்திற்கு போயிருக்கலாம்...' கெதக் என்றிருந்தது.

Related Posts:

  • #துருவங்கள்16 #D16 (நோ ஸ்பாய்லர்ஸ்) படத்தை முதல் காட்சியிலிருந்து தவற விடாமல் பார்க்க வேண்டும் என்றே நாலாப்பக்கமும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஒருவேளை அதை தவிர்த்து, டைட்டில் போடும் காட்சியில் சென்றிருந்தால் எனக்குள் ஏற்றப்பட்ட மண்டை குழப்பம் &nbs… Read More
  • Ilaiyaraaja GOLDEN 80's PlayList 01 [Audio Only] ராஜபோதை: மதுரையிலிருந்தோ, தஞ்சாவூரிலிருந்தோ, திருநெல்வேலிருந்தோ... இப்படி தென் தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரிலிருந்தோ பிரயாணிக்கும் பேருந்து. அதில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள். அவைகள் ஓட்டுனர், நடத்துனரின் ரசனையா ? இல்ல… Read More
  • நயன்தாராவின் கண்டன அறிக்கையும் 'பிங்க்' திரைப்படமும் ஹீரோயினாய் திரையுலகில் மிளிர வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களிடம், இயக்குனர்களிடம் (கொஞ்சம் வளர்ந்த கதாநாயகனாய் இருந்தால்; அவர்களிடத்திலும்) அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பது திரையுலகத்தின் உள்ளேயும் சரி, கடைக்கோடி… Read More
  • Lady Super Star - Elegant Beauty Nayantara Read More
  • ப்ரேமம் - மலர் - சாய் பல்லவி அறிமுகமான முதல் படத்திலேயே மலர், மலர் என்று எல்லோரையும் அல்லோல கல்லோலப்பட வைத்து விட்டார், சாய் பல்லவி. கோத்தகிரியில் பொறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த தமிழ் பொண்ணு. MBBS கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறார் ! … Read More

0 comments:

Post a Comment