Tuesday, June 13, 2017

கடுகு


படத்தில் 'வில்லன்' பரத் கதாப்பாத்திரத்தை அவ்வளவு யதார்த்தமாய் சித்தரிக்க முடிந்தவர்களால், ஏன் 'கதாநாயகன்' ராஜ்குமார் பாத்திரத்தை அவ்வாறே வடிவமைக்க முடியவில்லை ?
பரத்தின் பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி, ஓட்டிப் பார்த்தால்.. நல்ல படமாய் இருக்கும் போலிருக்கே.. என்று சிலாகிக்க முடியும். பரத்தும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவர் நடித்த படத்திலேயே சிறப்பானது இது தான்.
தேவயானி புருஷர் ராஜ்குமாரின் கதாப்பாத்திரத்திற்கு வரலாம். விக்ரமன் படத்தில் வரும் நல்லவர்களுக்கே சவால் விடும் பாத்திரப்படைப்பு. காதலியாய் வரும் 'குற்றம் கடிதல்' நாயகி ராதிகா ப்ரஷித்தா, அவரின் ஃபிளாஸ்பேக்கை அவிழ்த்து விடும் போதே, படம் மூழ்க ஆரம்பித்து விடுவது கண்ணுக்கெதிராய் தெரிகிறது.
யதார்த்தத்தோடு சினிமாதனத்தை கலக்குகிறோம் பேர்வழி என்று அமெச்சூர் நாடகத்தனத்தை ஓவர் டோஸாய் கலந்து விட்டார்கள்.

Related Posts:

  • இளையராஜாவின் பதில் கடிதம் 1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, கடந்து வந்து தான் ப… Read More
  • கனவின்(ல்) வலி மதியம், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகெழுந்து, டீ கேட்டு குடித்து Subway Surfers விளையாட ஆரம்பித்தான் அவினாஷ். ஓரிரு நிமிடங்களில் திடீர் கேள்வியை கேட்டான். “அப்பா, நான் கனவுல இருக்கிறேனா ? நிஜத்துல இருக்கிறேனா ?” - “ஏ… Read More
  • காந்தி ஜெயந்தி அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்ம… Read More
  • Please consider the environment before printing this. இதை அச்சிடும் முன் சுற்றுச் சுழலை கருத்தில் கொள்ளவும். (Please consider the environment before printing this.) +++++++++++++++++++++++++++++++++++++++++ மரங்களை காப்போம். தேவையான போது மட்டும் அச்சிட்டு கொள்ளவு… Read More
  • வரும்…,ஆனா வராது….. தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி வருகிறது என்றே சொல்லலாம… Read More

0 comments:

Post a Comment