Wednesday, March 7, 2018

DEVA HITS # 06 - High Quality Audio



என்னைக் கேட்டால் சிலுக்கின் கண்களை விட சிவரஞ்சனியின் கண்களுக்குத் தான் கவர்ச்சி படு பயங்கரம் என்பேன். அம்மணியின் திறமையை தமிழ் திரையுலகம் சரியாய் அங்கீகரிக்காத சமயத்தில் டோலிவுட் அவரை 'ஊஹா' என்கிற பெயரில் சுவீகரித்துக் கொண்டது. மளமளவென்று உயர்ந்து 'ஊஹா' என்று அவரின் பெயரிலேயே படம் வருமளவிற்கு முன்னேறினார். முன்னணியில் இருக்கும் சமயத்திலேயே 'தெலுகு நடிகர்' ஸ்ரீகாந்தை கரம் பிடித்து செட்டில் ஆனார். 

தமிழ் சிவரஞ்சனியின் 'சந்தைக்கு வந்த கிளி' படத்திலுள்ள 'எருக்கஞ்செடியோரம்' பாடலில்லாமல் தேவா ஹிட்ஸ் முழுமையடையாது. இதே படத்திலுள்ள 'காலையிலும் மாலையிலும்' பாடலில் எஸ்பிபி உடன் சுனந்தா. <3 <3 

ஹீரோவை 'அப்படியே கமல் மாறியே இருக்கீங்க..' என்று ஏற்றி விட்டிருப்பார்கள் போல. இரு பாடல்களிலும் செம அட்டிடுட் காண்பிக்கிறார். 

()

'தாய் மனசு' - கஸ்தூரி ராஜா படம். சோலையம்மா படத்திற்காக பதிக்கப்பட்ட 'ஊரோரம் கம்மாக்கரை...' பாடலை இந்த படத்தில் தான் படமாக்கி இருக்கிறார்கள். 

() 

'கண்ணத்துல கன்னம் வச்சி..' - இலை மறை காய் மறையாய் இல்லாமல் நேரடியாகவே ராஜாவின் 'அப்ப நே திய நி..' பாடலிருந்து சுட்டது. ஹிந்தியில் ஆனந்த் மிலிந்தனலே சுடும் போது நம்மூரு தேவா கூடாதா ? 

() 

என்ன தான் மெலடிஸ் கேட்டு கேட்டு லயித்தாலும் 'ஏ ஞானம் யெப்பா ஞானம்..' 'ஏ குட்டி முன்னால..' போன்ற பாடல்களை கேட்கும் போது வரும் உற்சாகமே அலாதி தான். 

()

#DevaHits #06

01 சின்னவரே சின்னவரே ! கறுப்பு நிலா
02 தூதுவளை இலை - தாய் மனசு 
03 எருக்கஞ்செடியோரம் ! சந்தைக்கு வந்த கிளி
04 சிறுமல்லிப் பூவே ! ஜல்லிக்கட்டுக் காளை
05 கண்ணத்துல கன்னம் வச்சி ! வாட்ச்மேன் வடிவேல்
06 காலையிலும் மாலையிலும் ! சந்தைக்கி வந்த கிளி
07 நீலகிரி மல ஓரத்துல ! நம்ம அண்ணாச்சி
08 சித்திரையில் திருமணம் ! செவத்த பொண்ணு
09 தூக்கணாங்குருவி ரெண்டு ! ஜல்லிக்கட்டுக்காளை
10 ராசா மேலே ஆச வச்ச ! நிலா
11 கொஞ்ச நாள் பொறு தலைவா ! ஆசை
12 புல்வெளி புல்வெளி தன்னில் ! ஆசை
13 ஒரு முறை எந்தன் நெஞ்சில் ! ஆசை
14 மீனம்மா அதிகாலையிலும் ! ஆசை
15 எப்படி எப்படி ! இந்து
16 ஏ ஞானம் யெப்பா ஞானம் ! இந்து
17 கொத்தமல்லி வாசம் ! இந்து
18 ஏ குட்டி முன்னால ! இந்து

#தேவகானம் #06

யான் பெற்ற இன்பம்... 

Related Posts:

  • காந்தி ஜெயந்தி அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்ம… Read More
  • ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. டால்பி டிஜிட்டல் சன்னாட்டா.. dhanu SHAMITABH bachchan (ஷமிதாப்) படத்தில் தனுஷ் நடிகர். படத்தில் அவருக்கு குரல் கொடுப்பவராக (Dubbing Artist) அமிதாப். தனுஷ் பிரபலமாவது அவரின் நடிப்பாலா ? இல்லை அமிதாபின் குரலாலா ? என்று இருவருக்குமிடையே ஏற்படும் மோதல… Read More
  • இளையராஜாவின் பதில் கடிதம் 1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, கடந்து வந்து தான் ப… Read More
  • அதிதி 2014 (தமிழ்) இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம். அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன். மலையாளத்தின் “… Read More
  • Please consider the environment before printing this. இதை அச்சிடும் முன் சுற்றுச் சுழலை கருத்தில் கொள்ளவும். (Please consider the environment before printing this.) +++++++++++++++++++++++++++++++++++++++++ மரங்களை காப்போம். தேவையான போது மட்டும் அச்சிட்டு கொள்ளவு… Read More

0 comments:

Post a Comment