Tuesday, February 7, 2017

படித்தால் மட்டும் போதுமா!


படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
ஆர் ஜே பாலாஜி, ஆதி, லாரன்ஸ், லிங்குசாமி என சினிமாக்காரர்களை பகடி செய்து திளைக்கிறோம்.
சின்னம்மாவையும் ஏகடியம் செய்து தமிழகத்தின் அரசியல் அவல நிலையை கண்டு நோகிறோம். வெறுப்பை உமிழ்கிறோம்.
பதிவு போட்டு, பின் அடுத்த வேளை சோற்றிற்கும், அடுத்த மாத தவணைக்கும் அலைகிறோம்.
இடையிடையே படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
அவர்களோ கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். நம்மை நமுட்டு சிரிப்புடன் கடக்கிறார்கள். செல்வங்களில் கொழிக்கிறார்கள்.
நாமோ படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
அடுத்த பதிவிற்கு தயாராகிறோம்.

Related Posts:

  • Airtel Super Singer Junior 4 ‪#‎SSJ‬ ‪#‎GrandFinale‬ ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 பவர்டு பை எனெர்ஜி தரும் கோல்டு வின்னர், கோ ப்ரெசென்ட்டட் பை அருண் எக்ஸ்செல்லோ அண்ட் NAC ஜூவல்லர்ஸ், இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் - இனிதே நடந்து முடிந்தது. இறுதிச் சுற்றில்… Read More
  • அவினாஷ் டைம்ஸ் ரொம்ப நாளாகவே வீட்டம்மணி சொல்லிட்டு இருக்காங்க, பையனை கூட்டிப்போய் காது டெஸ்ட் எடுக்கணும்னு. கூப்பிடும் போது சரியாய் respond பண்ணுவதில்லை என்பது தான் காரணம். அவன் டிவி பார்க்கும் சமயங்களில் அம்மாதிரி இருப்பதை நானும் க… Read More
  • தலித் சாயம் பூசும் இ - போராளிகள் 20th Jan 2016 : நாளிதழ் செய்தி  கழிவுநீர் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது. இதற்கான இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2014… Read More
  • கயல் (2014 - தமிழ்) படத்தில்  இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல் படத்திலும் பெரும்பாலான க… Read More
  • பை பை ஏர்டெல், வெல்கம் ACT ஃபைபர் நெட் இந்த அரசு அலுவலர்கள் டைப் ரைட்டர் மெஷினில் ஒற்றை விரலை வைத்து டைப்பி கொண்டிருப்பார்களே, அது போலத் தான் நானும்,  பத்து நாளாய் மொபைல் டேட்டாவில் ஒற்றை விரலில் தடவி தழுவி முக நூலில் உலாவினேன். ஒன்றிரண்டு பதி… Read More

2 comments: