Saturday, February 4, 2017

MR VACCINE - பள்ளியிலிருந்து வந்த புது குழப்பம் (04-02-2017)


மகனின் பள்ளியில் இன்றைக்கு 'ஓபன் டே' - அப்பா, அம்மா இருவருமே கண்டிப்பாய் வந்தாக வேண்டும் என்று சொல்லியனுப்பியிருந்தார்கள். 9 டு 12 நேரம். வழக்கம் போல 12 மணிக்கு தான் செல்ல முடிந்தது.

சென்றவுடன் 'கிளாஸ் மிஸ்' கீழ் காணும் இணைப்பிலுள்ள சர்குலரை நீட்டி படித்து பார்க்கச் சொன்னார். படிப்பதற்கு முன் அதன் சாராம்சத்தை கேட்டேன். "பள்ளி சார்பாய் குழந்தைகளுக்கு MR-VAC vaccine போடலாம் என்று நீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் கையொப்பமுடன் பெயரை குறித்துக் கொள்வோம். Vaccine வேண்டாம் என்று முடிவெடுப்பீர்களானேயானால், ஒரு கடிதம் வாயிலால தெரிவித்து விடவும்." என்றார்.

"MR Vaccine போடுவதற்கு அனுமதி கேட்டு நீங்கள் முன்னரே ஒரு சர்குலரை, பையனின் வாயிலாய் அனுப்பி, அதில் நாங்களும் 'எஸ்' என்று கையெழுத்து போட்டாயிற்றே..." - என்றேன்.

"அதுக்கு தான்.. இப்ப இந்த சர்குலரை படித்து பார்க்கச் சொன்னேன்" என்று மடக்கினார்.

அது Green Gross Health Organisation எனும் ஒரு NGO வின் அறிக்கை. படித்து பார்த்ததில், அவர்கள் இந்த vaccine சம்பந்தமாய் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஆல் இந்தியா டாக்டர்ஸ் அசோசியேஷன் போன்ற நிறுவனங்களிடமிருந்து சில கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும். அது சம்பந்தமாய் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வந்து பின் Vaccine போட்டுக் கொள்ளவும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள்.

"ஏன் இப்படி குழப்பத்திற்கு உள்ளாக்குகிறீர்கள்.. வாட்ஸ் அப்பில் வந்தது வதந்தி என்று தெரிந்ததால் தானே.. தைரியமாய் இருந்தோம்... பள்ளியிலிருந்தே இப்படி ஒரு சர்குலரை நீட்டினால்.. நாங்கள் பயந்து விட மாட்டோமோ...? - என்று வினவினேன்.

"சார்... அதெல்லாம் எனக்கு தெரியாது... சர்குலரை படிச்சி பாத்துட்டிங்கள்ல... விருப்பமிருந்தால் போட்டு கொள்ளவும்... இல்லை என்றால் கடிதம் எழுதி கொடுத்து விடவும்..."

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. " - என்றேன்.

"இல்லை சார்.... அல்ரெடி லேட்.. இன்னைக்கே லிஸ்ட் சப்மிட் பண்ணியாகணும்... திங்களிருந்து வேலை ஆரம்பித்து விடும்..." என்றார்..

"இல்ல மேடம்... பள்ளி .சார்பாய் முடிவெடுத்து.. இப்ப நீங்களே இப்படி ஒன்றை சொல்லி... அவகாசமே கொடுக்காமல் ஏன் நெருக்குகிறீர்கள்..."

அந்த ஆசிரியரோ, சார்.. எஸ்-னா எஸுக்கு.. நோ-னா நோ-னு போயிட்டே இருக்க வேண்டியது தானே - என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார்.

"சரி... இப்போதைக்கு 'எஸ்' என்று குறித்துக் கொள்ளுங்கள். 'நோ' என்று நினைத்தால்.. திங்கள் காலை வந்து எழுதி கொடுக்கிறேன்..." என்றேன்.

"இல்லை.. இன்றே எஸ்.. நோ.. லிஸ்ட் போயாக வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி தான் மருந்துகள் வரும் - என்று கதை விட்டார்.

எனக்குள் படுத்து கொண்டிருந்த மிருகம், பேச்சினிடையே சிறிது நேரத்திற்கு முன்பு தான் எழுந்து நெட்டி முறித்தது. இப்போது அது தலையை சிலுப்பி வெகுண்டெழுந்தது.

"என்ன மேடம்... இப்படி டிப்ளமேடிக்-கா பேசுறீங்க.. இப்ப உங்க கிட்ட நான் கேள்வி கேக்குறேன்னா.. அது உங்க கிட்ட இல்ல. உங்க மேனேஜ்மென்ட் கிட்ட.." என்றேன்.

(இந்த சமயத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். முன்பெல்லாம் இந்த மாதிரி சூழ்நிலைகளில் முடிவெடுக்க தெரியாமல், கேள்வி கேட்கவும் தயங்கி, மௌனித்து, மனதிற்கு எது சரி என்று படுகிறதோ.. அதன் பிரகாரம் முடிவெடுத்து வெளியேறி விடுவேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இருக்க முடிவதில்லை. போராட்டக் குணம் அதிகரித்துள்ளது. நன்றி : முகநூல் :-D )

"சரி... இன்னாரை போய் சந்திக்கவும்.." என்று அனுப்பி வைத்தார். அவரை சந்திக்க காத்திருக்க வைக்கப்பட்டோம். இடையில் அந்த ஆசிரியரே உள்ளே சென்று திரும்பி வந்தார். இந்த மாதிரி வெளியே ஒருவர் போராட்டம் பண்ணிக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்க வேண்டும்.

"ஓகே சார்... நாங்கள் இப்போதைக்கு "எஸ்" என்று குறித்து வைத்துள்ளோம். நீங்கள் "நோ" என்று சொன்னால் கடிதத்துடன் திங்கள் காலை வந்து விடவும் என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

கேட்டால் கிடைக்கும் - ASK !

பி.கு. கமெண்ட் பேட்டியில் அந்த அறிக்கையினை இணைத்துள்ளேன். மருத்துவர்கள் / சம்மந்தப்பட்டவர்கள் தயக்கத்தினை தெளிவுப் படுத்த வேண்டுகிறேன்.


Related Posts:

  • அதிதி 2014 (தமிழ்) இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம். அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன். மலையாளத்தின் “… Read More
  • ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. டால்பி டிஜிட்டல் சன்னாட்டா.. dhanu SHAMITABH bachchan (ஷமிதாப்) படத்தில் தனுஷ் நடிகர். படத்தில் அவருக்கு குரல் கொடுப்பவராக (Dubbing Artist) அமிதாப். தனுஷ் பிரபலமாவது அவரின் நடிப்பாலா ? இல்லை அமிதாபின் குரலாலா ? என்று இருவருக்குமிடையே ஏற்படும் மோதல… Read More
  • இளையராஜாவின் பதில் கடிதம் 1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, கடந்து வந்து தான் ப… Read More
  • காந்தி ஜெயந்தி அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்ம… Read More
  • யான் கானா பாலா வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா. இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இ… Read More

0 comments:

Post a Comment