20th Jan 2016 : நாளிதழ் செய்தி கழிவுநீர் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது. இதற்கான இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தள்ளது. </> துரைப்பாக்கம் அருகே ஒக்கியம்பேட்டையில் தலப்பாக்கட்டி பிரியாணி கடை உள்ளது. இந்த ஹோட்டலுக்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால், ஹோட்டலின் பின்பகுதியில் தரையில் குழி தோண்டி பெரிய தொட்டி கட்டி அதில் கழிவுநீரை விடுகின்றனர். தினமும் தனியார் லாரிகள் மூலம் இந்த கழிவுநீர் நிறுவனங்கள் மூலம் அகற்றப்படுகிறது. </> வழக்கம் போலவேயே அன்றைய தினமும் கழிவுநீர் அகற்றப்பட்ட நிலையில், “கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை தூர்வார வேண்டும். அதற்கு தனியாக பணம் தருகிறோம்” என்று ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர். </></></></> அதைத் தொடர்ந்து, முதலில் இருவர் இறங்கி விஷ வாயு தாக்கி இறக்க, அவர்களுக்கு என்ன ஆச்சு.. என்று இறங்கிய மூன்றாம் நபரும் தாக்குதலுக்கு பலியாகிறார். இது வரை இந்த செய்தியில் எங்கேயும் சாதி வரவில்லை.
தீடிரென இங்கே சமூக வலைத்தள இ - போராளிகள் சிலர் அவர்தம் பதிவுகளில் பொங்கி எழு... நெஞ்சே எழு... என்று பொங்கலாய் பொங்கியிருந்தனர். அதாகப்பட்டது இவர்களே இறந்தவர்களின் சாதிகளை கண்டுபிடித்து சாயம் பூசியிருந்தனர். விஷ வாயு தாக்கி இறந்த அனைவருமே தலித்துகளாம். இவர்கள் எல்லாம்... தாம் ஒரு பெரியாரிஸ்ட், தலித் ஆதரவாளர், பிராமண எதிர்ப்பாளர் என்பதை முன்னிறுத்தி, தாம் ஒரு போராளி என்று நிரூபிக்க துடிப்பவர்கள். அதாவது fake போராளிகள் !!
அந்த உயிர்களுக்கு என்ன மதிப்பு... என்ன கொடுமை...
ReplyDeleteமுக நூலின் பதிவை அப்படியே பகிர்ந்ததால்... இப்போது இங்கே பதிவு திருத்தப்பட்டுள்ளது. இப்போது படித்தால் பதிவின் நோக்கம் புரியும் :-)
Delete