Saturday, December 31, 2016

Ilaiyaraaja GOLDEN 80's PlayList 01 [Audio Only]



ராஜபோதை:

மதுரையிலிருந்தோ, தஞ்சாவூரிலிருந்தோ, திருநெல்வேலிருந்தோ... இப்படி தென் தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரிலிருந்தோ பிரயாணிக்கும் பேருந்து. அதில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள். அவைகள் ஓட்டுனர், நடத்துனரின் ரசனையா ? இல்லை பதிந்தவரின் ரசனையா ? என்பதையெல்லாம் யோசிக்க விடாமல் நேர்த்தியாய் அடுத்தடுத்து ஒலிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்.

இந்த சுகானுபவத்தினை இம்மி பிரளாமல் கொண்டு வரத் துடித்தினும் முயற்சியின் முதல் படி.

இளையராஜாவிற்காக... ராஜாவின் மற்றும் இசையின் ரசிகர்களுக்காக... எல்லாவற்றிக்கும் மேலாய் எனக்காக...

Songs to Hear Before You Die என்ற பதத்தை நியாயம் செய்யும் தொகுப்பாய் இருக்கும் என் நம்புகிறேன்.

Ilaiyaraaja GOLDEN 80's PlayList 01

ஒவ்வொரு தொகுப்பிலும் 25 பாடல்கள் சேர்ப்பதாய் உத்தேசம். முதல் தொகுப்பில் இதுவரை 12. எல்லாமே ஜினல் ஜினல் ஒரிஜினல் ஆடியோ நிறுவனங்களின் அதிகாரபூர்வ வெளியீடு. அதை தேடிப்பிடிப்பதில் சிரமம் இருப்பதால்... STAY TUNED...

பாடல்களை முழுமையாய் சுவாசிக்க இந்த தொகுப்பில்
ஆசுவாசமடையக்கூடிய அமைதி கொள்ளக்கூடிய விஷயம் இருக்கிறது. ஆம், இவைகள் எல்லாமே ஒலிக்க கூடிய பாடல்கள் மட்டுமே! ஒளி இருக்காது !!

உங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள் !!!


ORIGINAL, LEGAL & HIGH QUALITY AUDIO PLAY
CREDIT : INRECO, SAREGAMA
MY FAVOURITE LIST




Related Posts:

  • குடி குடியை கெடுக்கும் ‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும் “குடி குடியை கெடுக்கும்”… Read More
  • 1944 வெளிவந்த ஆனந்த விகடன் அட்டை படம் Read More
  • ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. டால்பி டிஜிட்டல் சன்னாட்டா.. dhanu SHAMITABH bachchan (ஷமிதாப்) படத்தில் தனுஷ் நடிகர். படத்தில் அவருக்கு குரல் கொடுப்பவராக (Dubbing Artist) அமிதாப். தனுஷ் பிரபலமாவது அவரின் நடிப்பாலா ? இல்லை அமிதாபின் குரலாலா ? என்று இருவருக்குமிடையே ஏற்படும் மோதல… Read More
  • லிங்கு சாமியும் இயேசு தாசும் பின்னே ஃ பிளிப் கார்ட்டும் சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக ஒரு விஷயத்திற்காக உடனுக்குடனடியாய் பொங்குவதும் பின் அதையே பிடித்து தொங்குவதும் அவசியம் இல்லாதது. லிங்கு, ஜேசுதாஸ் தொடங்கி பிளிப்கார்ட் வரையில், எல்லா… Read More
  • யான் கானா பாலா வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா. இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இ… Read More

0 comments:

Post a Comment