Saturday, February 21, 2015

Airtel Super Singer Junior 4 ‪#‎SSJ‬ ‪#‎GrandFinale‬



ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 பவர்டு பை எனெர்ஜி தரும் கோல்டு வின்னர், கோ ப்ரெசென்ட்டட் பை அருண் எக்ஸ்செல்லோ அண்ட் NAC ஜூவல்லர்ஸ், இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் - இனிதே நடந்து முடிந்தது. இறுதிச் சுற்றில் பாடிய ஆறு போட்டியாளர்களுமே திறமையானவர்கள் தான். சினிம-அதிர்ஷ்டம் கை கூடும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஜொலிக்க கூடியவர்கள் தாம்.

**

ஸ்ரீஷா - பொறுத்தவரை நேரடியாய் ரெகார்டிங் ஸ்டுடியோவிற்கு செல்லலாம் என்று நடுவர்களாலே அடிக்கடி பாராட்டைப்   பெற்றவர். மட்டுமல்லாம் சினிமாவில் பாட வாய்ப்பும் கிடைத்தாயிற்று.

**

அனுஷ்யா - ஒன்பதே வயது குட்டிப் பெண்.  ரீ என்ட்ரி ரவுண்டு மூலம் நுழைந்து, 'பறை' பாடலை பாடி பட்டையை கிளப்பி, அடுத்தடுத்து நல்ல நல்ல Performance கொடுத்து Pre - Finals இல் கலக்கியவர். சொல்ல முடியாது, அடுத்து சிங்கரில் மறுபடியும் களமிறக்கப்படலாம்.
**
'பரத்' - நல்ல எனெர்ஜடிக் சிங்கர். கார்த்தியின் அக்மார்க் தெலுகு மொக்கை படமான அலெக்ஸ் பாண்டியனில் வரும் மொக்கை பாடலான 'Bad Boy' பாடலை அசத்தலாய் பாடி, அந்த பாட்டையே பிடிக்கச்  செய்தவர். மெலடி பாடல்களையும் பாடி திறமையை நிரூபித்தவர்.
**
'ஹரி பிரியா' -  இவருக்குத் தான் முதலிடம் என்கின்ற மாதிரி ஒரு மாயையை உண்டாக்கியதில் விஜய் டிவிக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமீபத்தில் மறைந்த அவரின் தந்தையை பற்றி அடிக்கடி பேச வைத்து, சென்டிமென்ட் கொடுத்து எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தவர்கள். அதற்காக இவர் திறமை குறைந்தவர் என்று மதிப்பிட முடியாது. ஸ்ரீஷா, ஜெசிக்கா வை விட நன்றாய் பாடக் கூடியவர்.
**
'ஜெஸ்ஸிகா' - கடைசி நேரத்தில் ஆட்டத்தை கலைத்தவர்.  தமிழனம், தனி ஈழம் என்று  அனைத்திந்திய, உலக  தமிழர்களின் கண்களில் வலுக்கட்டாயமாய் கண்ணீரை வரவழைத்து கல்லா கட்டி வளைத்து போட்டதில் தான் இருக்கிறது விஜய் டிவி மற்றும் ஏர்டெலின் வியாபார சூட்சுமம். 'ஹரி பிரியா', ஸ்ரீஷாவை விட 'நடுவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்' ஒன்றரை மார்க் கம்மியானவர் தான்.
**
ஜெஸ்ஸிகா கனடாவில் வசிப்பவர். வசதியான குடும்ப பின்னணியை கொண்டவர் மாதிரி தான் தெரிகிறது. பரிசாய் கிடைத்த  ஒரு கிலோ தங்கத்தை, தமிழகத்தில், இலங்கையில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்டார்கள். பட் இந்த டீலிங்கில் தான் இருக்கிறது 'விஷயம்' என்றே பட்சி சொல்கிறது.
**
ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம், வருட வருடமாய் புடுங்குவதை விட, ஏர்டெல் ஒன்னும் பெரிதாய் புடுங்கி விடவில்லை, மக்கள் பணத்தை.  அது ஒரு தொழில்  நிறுவனம். முதலீடு போட்டு, செலவு செய்து, லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்களே தவிர இலவச சேவை செய்து விட மாட்டார்கள். ஏதோ ஆன்லைன் வோட்டிங் போடலாம் என்ற வசதியாவது செய்து கொடுத்தார்களே, அது தான் அவர்கள் அளவின் நியாயம்.
'ஆனா இன்டெர்நெட்டுக்கு நான் Pay பண்ணுகிறேனே, வோட்டு போடும் போது என்னோட 'பேன்ட்  விட்த் ' எக்கச்சக்கமாய் காலியாகிறதே' - என்று MTS Data Card வைத்திருக்கும் நண்பர் ஒருவர் கேட்டார். தெரிந்தே தான் கேட்டாரா என்பது தெரியவில்லை.
**
ஆங்.. நம்ம செல்லாக் குட்டி ஸ்பூர்த்தி பற்றி சொல்லவேயில்லையே. அவர் ஒரு ஸ்பெஷல் Catergory இல் உள்ள அசாத்திய திறமையை  சின்ன வயதிலேயே கிடைக்கப் பெற்ற ஞானக் குழந்தை. எப்படி ஸ்ரேயா கோஷல், சிறு வயதிலேயே இந்த மாதிரியான  ரியாலிட்டி ஷோவில் நுழைந்து இப்போது இந்திய அளவில் கலக்கிக் கொண்டிருக்கிறாரோ - அதே மாதிரி வரப் போகிற பெண் அவள் - குறித்து வைத்துக் கொள்ளுங்கள், Bet you.
**
ஸ்பூர்த்தி, ஹரி பிரியா முதலிரண்டு இடம். பரத் அல்லது  ஸ்ரீஷா தான் மூன்றாமிடம் வந்திருக்க வேண்டும் - நியாயமாய் பார்த்தால்.



**

Related Posts:

  • ராஜ போதை - PLAY LIST 1 TO 5 ஆடியோ காணொளியில்  Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 பத்தியில்  SHOW MORE சொடுக்கினால்  பாடல்களின் பட்டியல் தெரிய வரும் !   … Read More
  • MR VACCINE - பள்ளியிலிருந்து வந்த புது குழப்பம் (04-02-2017) மகனின் பள்ளியில் இன்றைக்கு 'ஓபன் டே' - அப்பா, அம்மா இருவருமே கண்டிப்பாய் வந்தாக வேண்டும் என்று சொல்லியனுப்பியிருந்தார்கள். 9 டு 12 நேரம். வழக்கம் போல 12 மணிக்கு தான் செல்ல முடிந்தது. சென்றவுடன் 'கிளாஸ் மிஸ்' கீழ் காணு… Read More
  • கிடாரி ! - ஒரு பார்வை சாத்தூர் ஊரின் பெரிய கையான கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) குத்துப்பட்டு, சாக கிடக்கும் நிலையில், கொம்பையாவின் கணக்கு வழக்குகளை பார்க்கும் பெரியவரின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது படம். அவர் கொம்பையாவிற்கு மச்சானும், … Read More
  • ராஜ போதை - 07 (80's GOLDEN PLAY LIST) 01. 1985 Aan Paavam - Kuyile Kuyile.mp3 02. 1985 Amutha Gaanam - Ore Raagam.mp3 03. 1985 Andha Oru Nimdham - Siriya Paravai.mp3 04. 1985 Kunguma Chimizh - Duet Nilavu Thoongum.mp3 05. 1985 Kunguma Chimizh - Goods Vandiyile… Read More
  • ராஜ போதை - 06 01. 1984 Nooravathu Naal - Vizhiyile Mani Vizhiyile 02. 1984 Pudhumai Penn - Kadhal Mayakkam 03. 1984 Vaazhkkai - Kalam Maralam 04. 1984 Vaidhegi Kaaththirunthaal - Duet Indraikku 05. 1984 Vaidhegi Kaaththirunthaal - Fema… Read More

0 comments:

Post a Comment